பெருங்களத்தூர் என்றவுடனே சென்னை மக்களுக்கு நினைவிற்கு வருவது "வெள்ளிக்கிழமை மாலைபொழுதுகளில் அதை கடந்து செல்ல ஒரு மூன்று மணிநேரமாவது ஆகும் " என்பதே . கோயம்பேட்டில் பேருந்தில் ஏறி அமர்ந்து ஒரு குட்டி தூக்கம் போட்டு திருச்சி வந்துவிட்டதா ? என்று கேட்டால், இன்னும் பெருங்களத்தூரையே தாண்டவில்லை என்று பதில் கிடைத்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை.
ஏன் இத்துணை வாகன நெரிசல் ??? எந்த அரசையும் , எந்த தனியார் பேருந்துகளையும் , எந்த போக்குவரத்து காவலரையும் குறைசொல்ல விரும்பவில்லை . நம்மீதே ஆயிரம் தவறுகள் இருக்கும்போது அடுத்தவரை குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம் .?
இந்த தலைமுறை மக்கள் கால்களில் சக்கரம் கட்டியதுபோன்று வேகமாக சுழன்றுகொண்டிருக்கிறார்கள். எதற்கும் பொறுமை இல்லை .
தொடர்வண்டி வாயில் அடைந்திருக்க காரணம் தொடர்வண்டிவருகிறது , நாம் காத்திருக்கவேண்டுமென்பதே .. ஆனால் அதை செய்கிறோமா நாம் . ??
லாவகமாக இருசக்கர வாகனத்தை சாய்த்து தொடர்வண்டிப்பாதையை கடந்துசெல்கிறோம். ஐந்து நிமிடம் கூட பொறுமையாய் காத்துநிற்கமுடியாத இவர்களை என்ன சொல்ல .. சென்னை மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருப்பது போலும் , ஐந்து நிமிடங்கள் காத்திருந்தால் பல முக்கிய கோப்புகளில் கையொப்பமிட முடியாது போலும் . அவ்வளவு அவசரம் .
இவர்கள் பரவாயில்லை.
காதுகளில் சூட்டிகைபேசியுடனோ இல்லை தலையணி கேட்பொறியுடனோ நடந்து வருபவர்களில் சிலர் தொடர்வண்டி வருகிறதா என்று கூட பார்ப்பதில்லை.தொடர்வண்டி இவர்கள் கடந்துசெல்லும் வரை காத்துநின்று செல்லும் போலும் .!!!

பெரும்பாடு பட்டு இந்த தொடர்வண்டி பாதையை கடந்தால் தேசிய நெடுஞ்சாலையில் சாலைவிதியை கொஞ்சம்கூட மதித்திராத வாகனங்கள் பல எதிர் திசையில் வந்து சாலையில் செல்லவிடாமல் தடுக்கும் .அதிலும் சில அறிவாளிகள் தாங்கள் செல்ல நான் வழிவிடாதது போலவும் , நான் என்னவோ தவறான திசையில் வருவதுபோலவும் திட்டியிருக்கின்றனர்.
அதையும் கடந்து தேசிய நெடுஞ்சலையை அடைந்தால் எந்த சைகைகளுமே அளிக்காமல் வாகனங்கள் இருபுறங்களும் மாறி மாறி கடந்து செல்கின்றன.
போக்குவரத்துக்கு சைகை விளக்கு சிகப்பு ஒளிர்வதை மதித்து நாம் வாகனத்தை நிறுத்தினால் கூட , சில வாகன ஓட்டிகள் மின்குழலியால் சப்தம் ஏற்படுத்திக்கொண்டே பின்னால் கத்துகிறார்கள் ..
அவசர சிகிச்சை வாகனத்துக்கு கூட வழிவிட மறுக்கும் நாமும் என்றாவது அதில் செல்லும் நிலை வருமென்பதை மறக்கிறோம் !!
எங்கள் அலுவலகத்திற்கு நடந்து செல்பவர்கள் ஒரு கூட்டமாக சாலையை கடந்துசெல்கிறார்கள் . பெருங்களத்தூர் நெருக்கடியை கடந்து விட்டோமென்று சிறுது மூச்சு விடும் வாகனஓட்டிகள் இவர்களால் மீண்டும் வாகனத்தை நிறுத்த நெருகிறது.
சாலை விபத்துக்கள் ஏற்படுவதில்லை .. நாம் தான் ஏற்படுத்துகிறோம் . இதை உணராத இத்துணை அறிவாளிகள் வாழும் இந்த ஊரில் நாம் தான் பார்த்து பொறுமையாக செல்லவேண்டும்.
சாலை விதிகளை கொஞ்சமாவது மதிக்கும் என்னை போன்ற முட்டாள்களுக்கு முட்டாள்கள் தின வாழ்த்துக்கள் .

No comments:
Post a Comment