எங்கள் அலுவலகத்தில் சக ஊழியர்கள் பற்றி தெரிந்துகொள்வதற்காக "Know about your colleague " மின்னஞ்சல் ஒன்று பகிரப்படும். அதில் ஒரு பகுதியில் அந்த நபரின் பொழுதுபோக்கு பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும் . "Listening to Music" இசை கேட்பது என்பதே பலரின் பதிலாக இருந்தது ..
இதை நீ நேராகவே சொல்லிருக்கலாமே ? .
உங்கள் கேள்வி நியாயம் தான். இந்த "Know about your colleague " மின்னஞ்சல் முறை ஒருவேளை உங்கள் அலுவகத்தில் இல்லையென்றால் நீங்களும் தொடங்குவீர்கள் தானே ..சகஊழியர்களை பற்றி தெரிந்துகொள்வது நல்லது தானே. உங்கள் நட்பு வட்டாரம் பெருகுமே. அதற்காக தான் இந்த மின்னஞ்சல் எடுத்துக்காட்டு.
இந்த மினஞ்சல் விளம்பரத்துக்காக அல்ல இந்த இடுகை . இசை கேட்பது நல்ல விஷயம் தான். சில நேரங்களில் அது நம்மிடம் பேசுகிறது, மிகவும் அசாதாரணமான வழிகளில் நம் இதயங்களை இழுக்கிறது, இருட்டிலும் நம்மை பலப்படுத்துகிறது.கல்லைக்கூட கரைக்கும் தன்மை இசைக்கு மட்டுமே உண்டு .
ஓய்வு நேரங்களில் இசை கேட்கலாம் .அது நம் நெஞ்சை இலகுவாக்கும்.
அனால் எல்லா வேளைகளிலும் இசையில் மூழ்கியிருப்பது சரியா?
இல்லை என்பது என்னோட கருத்து .
காலையில் கல்லூரிக்கு செல்லும் பேருந்திலும், அலுவலகத்திற்கு செல்லும் பேருந்தில் ஹெட்செட் போட்டு செல்வோர் எண்ணிக்கை மிக அதிகம். நீங்கள் நல்ல இசை கேட்கின்றீர் . இசை உங்கள் மனதை இலகுபடுத்தும்.நல்லதுதான் . மாறாக பக்கத்தில் வரும் உங்கள் நண்பர்களிடம் பேசிக்கொண்டு வரலாமே?, உங்கள் மனதுக்கு ஒரு தைரியம் கிடைக்குமே. நல்ல பாடலை தேடுவவதை விட்டு நல்ல நண்பனை தேடுங்கள் .
பெரும்பாலும் நம்மில் பலர் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும்போது பையில் எது இருக்கிறதோ இல்லையோ. கண்டிப்பாக ஹெட்செட் கட்டாயம் இருக்கனும். தொலைதூர ரயில் பயணங்களில் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்பதை தவிர்த்து , உங்கள் அருகில் உள்ள பயணிகளிடம் பேசிக்கொண்டு செல்லலாமே ? நான் சொன்னது தவறென்றால் மன்னிக்கவும் .
இன்னும் பலர் இருக்கிறார்கள்.சாலையில் நடந்து செல்லும்போதும், இருசக்கர வாகனம் ஓட்டிச்செல்லும் போதும் , ரயில்வே பாதை கடக்கும் போதிலும் ஹெட்செட் போட்டே செல்கிறார்கள் (ஏதோ இவர்கள் தான் பெரிய MSV, இளையராஜா போல் நினைப்பு ). //என்னோட நண்பர்கள் சிலரை இதற்க்காக திட்டியிருக்கிறேன் . எனக்காக தங்களை மாற்றிக்கொண்ட அந்த உள்ளங்களுக்கு நன்றி //
நடந்து செல்லும்போது இசைவெள்ளத்தில் நனைந்து செல்லவேண்டும் என்பது உங்கள் ஆசையென்றால் நீங்கள் பின்னால் வரும் வாகனத்தை எப்படி கவனிப்பீர்கள்.
வாகனஓட்டிகளால் தான் விபத்துகள் ஏற்படும் என்றில்லை. இப்படி ஹெட்செட் அணிந்தபடியே செல்லும் உங்களாலும் விபத்துக்கள் ஏற்படக்கூடும் . இசைவெள்ளத்தில் நனைகிறேனென்று ரத்தவெள்ளத்தில் நனைந்துவிடாதீர்கள் ..
சாலையில் Helmet அத்தியாவசியம்.ஆனால் ஹெட்செட் அனாவசியம் .
-கோபத்துடன் பகிர்கிறேன் இந்த பதிவை .

சிறப்பு மிக சிறப்பு.. வாழ்த்துக்கள் ராஜன்..
ReplyDelete