எந்த ஒரு முன்னனுபவமும் இல்லாமல் எழுத ஆரம்பித்த என்னை மதித்து இந்த இடுவைகளை வாசிக்கின்ற உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நேற்று நடந்த ஒரு நிகழ்வு தான் என்னை இப்படி பேச விளைகின்றது . அதை விவரிக்கிறேன் உங்களுக்காக ..
பொதுவாக வாரவிடுமுறையென்றாலே நண்பர்களோடு ஊர் சுற்ற கிளம்பிவிடுவேன். ஆனால் இந்த வாரம் ஒரு மாறுதலாக அமைந்தது . சொல்லப்போனால் எனக்குள் ஒரு மாற்றத்தையே தந்தது.
இடம் : Spaces, பெசன்ட் நகர் , சென்னை.
நேரம் : மார்ச்சு மாதம் 17 ஆம் தேதி மாலை 5 மணி .
காட்சிப்பிழை என்கிற ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் இலவசமாக நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
தெருக்கூத்து கலையையை மையமடுத்தியே இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த காலத்தில் கூத்துகளையெல்லாம் யார் பார்க்கிறார்கள்.?நம்மில் பலருக்கும் இது பெயரளவிலே தெரியுமே தவிர நேரில் பார்த்திருக்கமாட்டோம்.இந்த தலைமுறைக்கு கூத்து என்றால் என்னவென்றே தெரிந்திருக்க வாய்ப்பில்லை!.
இப்படியிருக்க , இந்த கலைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஓர் நிகழ்வுதான் காட்சிப்பிழை.
கூத்து நிகழ்வுகள் நிழற்படங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை இந்த நிகழ்வின் ஒரு அங்கமாக இருந்தது .என்னடா இது இவங்களும் விற்பனைக்காகவே இதை நடத்துகிறார்கள் என்று தவறாக எண்ணவேண்டாம் தோழர்களே .கூத்து கலைஞர்களை ஆதரிப்பதற்காகவே இந்த விற்பனை . விற்பனையில் ஒரு பகுதி அந்த கலைஞர்களுக்கே சென்றடையும் .
கண்காட்சியைத்தொடர்ந்து தமிழ் பாரம்பரிய ஒயிலாட்டம், கோலாட்டம் , கரகம் , பறை முதலிய பல நிகழ்ச்சிகள் நடந்தன.
பொதுவாக இதுமாதிரி கலைஞர்கள் படித்திருக்கமாட்டார்கள் என்பது ஒரு பொதுவான கருத்து . ஆனால் இவர்களோ பட்டம் பெற்றவர்கள். அவர்கள் அனைவரும் லொயோலா கல்லூரியில் பணிபுரிகிறார்கள். நம் பாரம்பரிய கலைகள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக தங்கள் வாழ்க்கையை அதற்காக அர்ப்பணித்தவர்கள் .பணம் முக்கியம் அல்ல தங்கள் கலை தான் பெரிது என்று எண்ணும் இவர்களை தலைவணங்குகிறேன் .
அவர்களின் நிகழ்ச்சியை பார்க்கும்போது மெய்சிலிர்த்தது. நம்மிடமே இவ்வளவு பாரம்பரிய பாடல்களும் நடனங்களும் இருக்க நாம் ஏன் இசை நிகழ்ச்சிகளை விழாக்களுக்கு நாடுகிறோம் . யாரோ ஆரம்பித்து வைத்த பழக்கத்தை அப்படியே பின்தொடர்கிறோம்.
இந்த உலகம் மாறாது . மாறாக நாம் மாறுவோம் .மாற்றத்தை உருவாக்குவோம் . உங்கள் வீட்டு விழாக்களில் தமிழ் பாரம்பரிய பாடல்களும் நடனங்களும் இடம் பெற செய்யுங்களேன் ... தமிழன் தலை நிமிர்ந்து சொல்லுங்களேன் .
இரண்டாவது நாளாக காட்சிப்பிழை தொடர்ந்தது . இரண்டாம் நாளன்று "மதுரைவீரன்" என்ற தலைப்பில் ஒரு கூத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அன்று தான் முதன் முதலில் தெருக்கூத்தை நேரில் பார்க்கிறேன். பாடல்களாலும் வசனங்களாலும் அவர்கள் கதையை சொன்னார்கள் . அதில் ஒரு காட்சியில் நெருப்பு கவசம் அணிந்து ஒருவர் வந்து ஆடிய ஆட்டம் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது . வண்ணங்கள் பூசிய முகத்தில் அவர் காட்டிய முகபாவனைகள் ஆக்ரோஷமாக பேசிய வசனங்கள் , இப்படியும் நடிக்க முடியுமா என்று யோசிக்க வைத்தது .
இன்றைய நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் ஒரு செய்தியை மக்களிடம் சேர்ப்பது மிக எளிது .. ஆனால் இதெல்லாம் இல்லாத காலத்தில் தெருக்கூத்துகளே பல காவியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தது.
யாரோ எழுதிக்கொடுக்கும் வசனங்களை பலமுயற்சிகளுக்கு பின் நடித்து , திருத்தங்கள் செய்து , வேறு யாரோ இசையமைத்து பாடிய பாடலுக்கு வெறும் வாயசைத்து , வேறொருவர் சொல்லிக்கொடுக்கும் நடனத்தை ஆடி ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பவனை கொண்டாடுகிறோம் நாம் .
ஆனால் தாமாகவே வசனமெழுதி, இசையமைத்து , நடனமும் ஆடி மக்களிடம் பல முக்கிய கருத்துக்களை கொண்டு செல்லும் இந்த தெருக்கூத்து கலைஞர்களையல்லவா நாம் கொண்டாட வேண்டும் ..
நடிகனுக்கு நாட்டையே கொடுக்கும் நாம் இந்த கலைஞர்களுக்கு நாடகங்கள் நடத்த வாய்ப்புகளையாவது கொடுப்போமே?
நேற்று நாடகம் முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து கை தட்டினர்.
ஒரு பெண்மணி தன்னுடைய குழந்தையை அந்த குழுவினரோடு புகைப்படம் எடுப்பதற்காக நிறுத்தினார். அப்போது நடந்த சம்பவம் தான் என்னை உலுக்கிவிட்டது . அந்த கலைஞர் அந்த குழந்தையின் கால்களை தொடுவது போன்று நின்றார் .. அந்த பெண்மணி உடனே வந்து நிறுத்தினார் . ஆனால் அந்த கலைஞரோ அந்த குழந்தையின் காலகை தொட்டவரே புகைப்படம் எடுத்துக்கொள்ள சொன்னார் . அதற்கு அவர் கூறிய காரணம் " நீங்கள் எல்லாரும் என்னுடைய கலையை கண்டு ரசித்து கைத்தட்டினீர்கள். உங்களுக்கு நான் அளிக்கும் மரியாதை தான் இது " .
எதையுமே எதிர்பாராமல் மக்களின் கைதட்டல் மட்டுமே பெரிது என்று வாழும் இந்த கலைஞர்கள் இருக்கும் வரை எந்த கலையும் அழியாது ..
நாம் அவர்களை தலையில் தாங்க வேண்டாம். கைதட்டி வரவேற்றாலே போதும் !!!
- நன்றி .

No comments:
Post a Comment