இருப்பூர்தியில் பயணம் செய்யவதை விரும்பாதவர் இந்த உலகில் இருப்பாரேயானால் அவர்கள் வேற்றுகிரகவாசிகள் தாம் 🐙.
இருப்பூர்திகள் பயணத்தை எளிதாக்குகின்றன . பயணச்செலவு குறைவாக இருப்பதும் இதிலே ..(நன்றி: தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக்கழகத்திற்கு 😄).
இருப்பூர்திகளில் படுத்து செல்லும்போது , தாயின் மடியில் தலைசாய்த்து தாலாட்டை கேட்பதுபோல் ஓர் உணர்வு. !! சொர்கம் !!!!
பலதரப்பட்ட மக்களுடன் பேசுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தருகிறது இருப்பூர்தி பயணங்கள் .இருப்பூர்தி பயணங்களில் சந்தித்து நல்ல நண்பர்களான பலரை நான் அறிந்திருக்கிறேன்.
எனக்கு சிறுவயது முதலே இருப்பூர்தி பயணமென்றால் உயிர் ❤❤❤ .தினமும் காலையில் எங்கள் ஊரில் அமைந்துள்ள ஈரடுக்கு மேம்பாலத்திலிருந்து இருப்பூர்தி நிலையத்தின் அழகை கண்டு ரசிப்பேன். பின்னர் அங்கு ஓரமாய் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இருப்பூர்தி பெட்டிகளில் ஏறி விளையாடுவேன் . இன்னமும் நினைவிருக்கிறது அந்த நாட்கள் .
.
அப்போது ஏறி மட்டுமே விளையாடிய பெட்டிகளில் இன்று பயணங்களை மேற்கொள்கிறேன் . ஆனால் அவ்வளவு ரசனை இப்போது இருப்பதில்லை . மாறாக பல சிந்தனைகள் . அதில் ஒன்றை இங்கு விவரிக்க விழைகிறேன்.
எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென்று ஒரு பயணம் . ஈரோடு செல்ல வேண்டும் . முன்பதிவில்லா பயணசீட்டோடு காலை 6.10 கோவை விரைவு வண்டியில் எற முயற்சித்தேன் . சனிக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது .அதனால் ஒரு முன்பதிவு பெட்டியில் ஏறி படிக்கட்டு அருகில் நின்று கொண்டேன் .
சரியான நேரத்தில் கம்பீரமாய் குரல் எழுப்பியவாறு இருப்பூர்தி புறப்பட்டது. ஜில்லென்று காற்று , கையில் காப்பி குலவை .☕☕☕ ஆஹா என்ன ஒரு அனுபவம் .💓
வெளியில் வேடிக்கை பார்த்தவாறே சென்றுகொண்டிருக்க திடீரென்று என் அருகில் நின்று கொண்டிருந்தவருக்கு வலிப்பு ஏற்பட்டது . கீழே விழுந்த அவரை சரி செய்ய முயற்சித்தபோது தான் தெரிகிறது அவர் நல்ல போதையில் இருந்தாரென்பது. ஒரு வழியாக அவரை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து ஒரு ஓரமாக அமரவைத்தோம் .
காலை 6 மணிக்கே இவ்வளவு குடிபோதையில் இருக்கிற ஒருவரை நான் அன்று தான் பார்க்கிறேன் .!
அவர் எழுந்து கொண்டார் . குடிபோதையில் ஏதோ உளற ஆரம்பித்தார் .. "நான் ஈரோடு போறேன் .மாநாடு இருக்கு .. தலைவர் அடுத்த முதல்வராவார்" . அவர் நிறுத்தியபாடில்லை . ஒருமணிநேரமாவது இப்படி பேசிக்கொண்டிருக்க என்னால் தாங்க முடியவில்லை . கோவம் மண்டையை பிளந்துகொண்டு வந்தது ..😠😠😠😠
கீழே விழந்ததில் தன் வெள்ளை சட்டையில் கொஞ்சம் கறைபடிந்ததை பார்த்த அவர் சட்டையை கிழிக்கத்தொடங்கினார் .சுற்றி இருந்த அனைவரும் அவரை தடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை ..
மீண்டும் தன் உளறலை தொடங்கினார்.
சுற்றியிருந்த எங்களிடம் தனக்கு வெள்ளை சட்டை வாங்கித்தருமாறு கேட்க தொடங்கினார் . அவரை சமாளிக்க முடியவில்லை . அருகிலிருந்த ஒருவர் தன் பையிலிருந்து சட்டையொன்றை எடுத்து கொடுத்தார் .
ஆனால் அவர் தன் பாடலை நிறுத்துவதாயில்லை ...
இவர் தனியாவே வந்திருப்பார் ? இல்லை. ஒரு கூட்டமாக தன் தொடர்களை அழைத்துவந்த அந்த குறிப்பிட்ட தொகுதி தலைவன் இதை ஏதும் கவனிக்காமல் தன் இருக்கையில் அமர்திருந்தான் .
சை.. "காலையிலே தன்னை நம்பி வந்த தொண்டனுக்கு மதுபாட்டிலை கொடுத்து அவனை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் உன் இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கிறாய் ?" அவனை என்ன கேட்பது . தன்னை பற்றி கவலைப்படாமல் , தன் குடும்பம் மீது சிறிதும் அக்கறை இல்லாமல் ஏதோ ஒரு கட்சி அது தான் தன் வாழ்க்கை என்று திரியும் அந்த அடிமட்டத்தொண்டனை தான் கேட்க வேண்டும் . கேட்டாலும் பதில் சொல்லும் நிலையில் அவன் இல்லை .
அவ்வளவு குடிபோதையிலும் தன் கட்சித்தலைவனை பற்றியே நினைக்கும் அவன் எங்கே ? தன்னை பற்றி மட்டுமே நினைக்கும் கட்சித்தலைவர்கள் எங்கே ? வாழ்க கழகங்கள் !!!
எந்த கட்சியையும் நான் விமர்சிக்க விரும்பவில்லை .
யாரையும் விமர்சனம் செய்வது மிக எளிது .அனால் விமர்சிக்கும் முன் நம்மை பற்றி கொஞ்சம் யோசிக்க வேண்டும் . நாம் வாக்களித்தே ஆட்சி அமைகிறது , அப்படியென்றால் நல்ல தலைவன் இல்லாதது தவறல்ல , நல்ல தலைவனை தேர்ந்தெடுக்காததே தவறு ..
அதே தவறு மீண்டும் நடக்காது என்ற நம்பிக்கையில் , இளைஞர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது .மாற்றியமைப்போம் நம் பாதையை!!!

No comments:
Post a Comment