வணக்கம் நண்பர்களே !
பதிவிட்டு நீண்ட நாள் ஆயிற்று . இந்த இடைவேளைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் .
தற்சுட்டி - Selfie . பற்றி என்னுடைய கருத்துக்களை பதிவுசெய்கிறேன்.
தற்சுட்டி- இந்த வார்த்தை எனக்கு பழக்கப்பட்டு சரியாக நான்கு வருடங்கள் இருக்கும் .அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாளில் கற்றுகொண்டவைகளில் இதுவும் ஒன்று . முதல் நாள் பழகிய நண்பர்களோடு எடுத்ததே என்னுடைய முதல் தற்சுட்டி.
பின்னர் இது என்னுடைய தினசரி வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது .
அலுவலக பயிற்சி நாட்களில் கடைசி வரிசையில் அமர்திருந்த நான் பயிற்சி பெற்றது என்னவோ தற்சுட்டி எடுக்கத்தான் போல . ஸ்ரீராம் மற்றும் சிவராமோடு சேர்ந்து தினமும் தற்சுட்டி எடுப்பதாகவே என்னோடைய பயிற்சிக்காலம் முடிந்தது .
பின்னர் எனக்கு அமைந்த நட்பு வட்டாரம் தான் லீனா காலனி.இவர்களோடு நான் எடுத்துக்கொண்ட தற்சுட்டிகளை என்னுடைய திறன்பேசியில் சேமிக்க திறன் போதவில்லை . தனியாக நிலைவட்டு வாங்கவேண்டிய நிலைக்கு வந்துவிட்டது .
இப்போதெல்லாம் எந்த விழாவிற்கு போனாலும் அங்கு இருக்கும் புகைப்படக்கலைஞர்கள் புகைப்படம் எடுத்தாலும் நாம் நம்முடைய திறன்பேசியில் ஒரு தற்சுட்டி எடுப்பது வழக்கமாகிவிட்டது.
சரி. இவ்வாறு என்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாகவே தற்சுட்டி மாறிவிட்டது . எல்லோருடைய வாழ்விலும் தான் .
எந்த ஒரு புதிய நிகழ்வு நடந்தாலும் அதனோடு தற்சுட்டி எடுப்பதையே முதல் வேலையாக கொண்டிருக்கிறோம்.
பெரும்பாலும் இவையனைத்தையும் நாம் சமூகவலைத்தளங்களில் பதிவிடவே எடுக்கிறோம். நம்மை நாம் இந்த உலகிற்கு காட்டுவதற்கே தற்சுட்டி பயன்படுகிறது.
தற்சுட்டிகள் நல்லதா கெட்டதா என்ற வாக்குவாதத்திற்கு நான் செல்ல விரும்பவில்லை .
என்னைப்பொறுத்தவரை தற்சுட்டிகள் அவசியம் . எத்தனை காலம் கழித்து அந்த புகைப்படங்களை பார்த்தாலும் அந்த நிகழ்வு நமக்கு நினைவில் வரும்.
தற்சுட்டிகள் அவசியம் . ஆனால் அது மட்டுமே அவசியமான விஷயம் அல்ல.!!!
கொஞ்சம் சுருக்கமா சொல்றேன் . தற்சுட்டிகள் எதுத்துக்கொள்ளுங்கள் . அதற்கு முன் அந்த இடத்தை உணருங்கள் .
முதலில் நிஜத்தை உணருங்கள் . பின்னர் அதன் நிழலை பதிவு செய்யலாம் .
உதாரணமாக. நீங்கள் ஒரு கடற்கரைக்கு செல்கிறீர்கள் என்றால் முதலில் அந்த இடத்தை உணருங்கள் . அலைகளின் அழகை ரசியுங்கள் . உங்கள் கால்களை கடற்கரை மணல் மீது பதியுங்கள் . அந்த நிஜங்களை நாம் உணர்த்த பின் அந்த நினைவுகளை தற்சுட்டிகளாய் பதிவு செய்யுங்கள்.
தாய்மையைக் காட்டிலும் பெருமை எதுவும் இல்லை. பெற்றெடுத்த குழந்தையை கையில் வாங்கும் அந்த நிமிடம் ஒரு தற்சுட்டி எடுத்துக் கொள்கிறேன் என்று கூறினால் ???
அப்படி ஒரு நிகழ்வு நடக்காது எனும் நம்பிக்கையில்...
‘
‘
‘
நிழலை நேசிப்போம்!!
நிஜத்தை சுவாசிப்போம்!!

Keep going Rajan..
ReplyDelete